’புத்தி பேதலிச்சுடுச்சுன்னு அர்த்தம்.’ என்பது உள்ளிட சுடு சொற்களை தாங்கிய ஒரு அறிக்கையை தன் ரசிகர்களை நோக்கி ரஜினி தட்டிவிட்டார். இது பெரும் புகைச்சலை பொதுவெளியில் கிளப்பியது.
இந்த சூழ்நிலையில் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி ‘ஹூ இஸ் திஸ் பிளாக்ஷீப்?’ எனும் தலைப்பில் இந்த விவகாரத்தை டீல் செய்து, ரஜினியை அவரது ரசிகர் வாயாலேயே கிழி கிழியென கிழிப்பது போல் சித்தரித்திருந்தது. சிலந்தி! எனும் பெயரில் வெளியான அந்த செய்தி பெரும் பரபரப்பை அரசியல் அரங்கில் கிளப்பியது. கடுப்பேறிய ரஜினி தரப்பு இந்த விஷயத்தை ஸ்டாலின், கலாநிதி ஆகியோர் கவனத்துக்கு கொண்டு போனது.
இதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட வருத்தம் தெரிவித்து முரசொலியின் ஆசிரியர் சார்பாக ஒரு பாக்ஸ் நியூஸை முரசொலியிலேயே போட்டுவிட்டனர். கையோடு ரஜினிக்கு போன் செய்தும் சமாதானம் செய்தாராம் தி.மு.க. குடும்பத்தின் ஒரு மிக முக்கிய நிர்வாகி.
இந்த தகவல் கட்சிக்குள் கசிய, மூத்த நிர்வாகிகளில் துவங்கி கழக உடன்பிறப்புகள் வரை என அத்தனை பேரும் கொந்தளித்துவிட்டார்களாம். அரசியல் நாளிதழில் இதெல்லாம் சகஜம், அரசியலில் இது வெகு சகஜம். ஏன் நம்மை பற்றி கமல் மோசமாக பேசவில்லையா? அதற்காக நாமென்ன புகாரா செய்தோம்? சின்னப்பையன் போல் ரஜினி நடக்கிறார், அவரை சமாதானம் வேறு செய்கிறீர்கள். இதைப் பார்த்து மற்ற கட்சிக்காரன் ‘ரஜினி கட்சி துவங்கும் முன்பேயே அவரைப் பார்த்து தொடை நடுங்குது தி.மு.க.ன்னு சொல்ல மாட்டானா?’ இவ்வளவு இறங்கிப் போகுமளவுக்கு அவரென்ன அம்மாம் பெரிய அப்பாடக்கரா? என்றார்களாம்.
ரஜினி அப்பாடக்கரா இல்லையா என பதில் சொல்வது யார்?
Discussion about this post