இயக்குநர் வெற்றி மாறன் – நடிகர் தனுஷ் கூட்டணி எப்பவுமே சக்ஸஸ் கூட்டணிதான். பொல்லாதவன், ஆடுகளம், வரிசையில் வடசென்னையை செம்ம கெத்தாக இறக்கினார்கள்.
ரிலீஸான புதிதில் படம் செம்மத்தியான விமர்சனங்களை அள்ளிக் கொண்டது. ஆளாளுக்கு கொண்டாடி தீர்த்தார்கள். ஆனால் காசிமேடு உள்ளிட்ட வடசென்னை மீனவ மக்கள் படத்தை பார்க்க துவங்கிய பின் தான் பிரச்னை விஸ்வரூபமெடுத்தது. அதாவது முழுக்க முழுக்க அந்தப்படத்தில் தங்களை கலீஜாக காட்டியிருக்கிறார் வெற்றி என்பது முக்கிய குற்றச்சாட்டு.
கல்யாணத்துக்கு முன்னாடியே லிப்லாக், செம்ம செக்ஸி ஃபர்ஸ்ட் நைட்டு, மீன் பிடி தோணியில் கடத்தல், வெட்டு, குத்து, கொல, கெட்டவார்த்தைன்னு ஒட்டுமொத்தமா தங்களை அந்தர் பண்ணிட்டார் வெற்றின்னு சவுண்டுவிட்டார்கள் வடசென்னைவாசிகள்.
இதற்கு சில அரசியல் தலைவர்களின் ஆசீர்வாதம் வேறு. விளைவு, பலான மற்றும் பண்பாடற்ற காட்சிகளை படத்திலிருந்து தூக்க வேண்டிய நிலை வந்துவிட்டது வெற்றி மாறனுக்கு. தூக்கிவிட்டார். இந்த நீக்கங்களுக்குப் பிறகு படத்தை பார்த்தால் சுண்டக்கஞ்சி இல்லாத மப்பு பார்ட்டி மாதிரி இருக்குதாம்.
இந்த பஞ்சாயத்துக்களால் டோட்டலாய் நொந்துவிட்ட வெற்றிமாறன் ‘போதும்டா சாமி நான் பட்டது. கலைஞனுக்கு இங்கே சுதந்திரமில்லை. இனி வடசென்னை ரெண்டாம் பாகமெல்லாம் வர வாய்ப்பே இல்லை.’ என்றிருக்கிறாராம்.
வுடு மச்சி, வட்சென்ன இல்லாங்காட்டி என்ன, தென்சென்ன எடுப்போம்!
Discussion about this post