ஏற்கனவே எரிஞ்சுட்டு இருக்கிற தீயில ரெண்டு பாட்டில் கிருஷ்ணாயில எடுத்து ஊத்துனா மாதிரி ஒரு காரியத்தை டீம் ஹெட் பண்ணி வைக்க, தாறுமாறா டென்ஷனாகி கிடக்கிறார்யா நம்ம தல.
இன்னா மேட்டர்?….
கடந்த ஐந்து தலைமுறையாக டைரக்டர் சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து நான்காவது படத்தையும் அஜித் செய்வதில் அவரது ரசிக கோடிகள் பக்கா கேடிகளாக மாறி இணையத்தில் வறுத்தெடுக்கிறார்கள். திருட்டுக் கதையாக இருந்தாலும் ச்சும்மா தில்லா! நல்லா! ஃபுல்லா கெத்தேறி நிற்கிறார் சர்கார் விஜய். இதை தல யின் ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இந்த துக்கத்துக்கு ஒரு மருந்து கொடுக்கும் விதமாக ‘விஸ்வாசம்’ படத்தின் செகண்ட் லுக் வெளியானது சமீபத்தில். ‘பாஸ் இதை நீங்களே வெச்சிருந்துருக்கலாம்! போஸ்டரே இவ்வளவு மொக்கையா இருக்கே, அப்போ படம்?’ என்று பேஸ்தடித்துக் கிடக்கின்றனர் அஜித்தின் ரசிகர்கள்.
போஸ்டருக்கு எதிராக தன் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டாததுதான் பாக்கி என்பது அஜித்தின் காதுகளுக்கு போக, அவர் இயக்குநர் சிவாவை கூப்பிட்டு காடுக் கத்து கத்திவிட்டாராம். ‘பசங்க டேஸ்ட் எனக்கு புரியும். இனி இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் என்கிட்ட விட்டுடுங்க.’ என்று சொல்லிவிட்டாராம். கிட்டத்தட்ட ஆணியே பிடுங்க வேண்டாம் எனும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டதில் சிறுத்தைக்கு செம்ம அவமானம், வெறுப்பு.
‘சால கடுப்புறா! நேனுவா இவர் கூட ஒர்க் பண்ண நினைச்சேன்? அவரா கூப்ட்டு நாலாவது படத்தையும் கொடுத்துட்டு இப்ப திட்றார்’ என்று தன் தெலுங்கு தோஸ்துகளிடம் மனம் நொந்து மாட்லாடுறாராம் சிவா.
இதற்கிடையில் நொந்து கிடக்கும் ரசிகர்களை குஷியாக்கும் விதமாக அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்புகள் காற்றில் கலந்துள்ளன. விநோத் இயக்க, போனிகபூர் தயாரிக்க, ஏ.ஆர்.ரெஹ்மான் இசையமைக்கிறார்! என்பதுதான் அது.
தல -டா!
Discussion about this post