மீடூ பிரச்சினை குறித்து பேசிய இயக்குனர் கரு .பழனியப்பன், மீடூ பிரச்சினை இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்டது என்றும் அதை அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள் எனவும் கூறினார். மீடூ பற்றிப் பேசுகிறார்கள் எல்லாம், 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றிப் பேசுவதுண்டா என அவர் கேள்வி எழுப்பினார். ஆத்தூர் சிறுமி ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா என்றும் கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பினார். மேலும், மீடியாக்கள் இவ்வளவு மீடூ பற்றிப் பேசுகிறார்கள், எந்த மீடியாவாவது ஒடுக்கப்பட்டவர்களுக்கு, எளிய மக்களுக்கு இப்படி எங்கு பார்த்தாலும் நடக்கும் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா என கேள்வி எழுப்பிய அவர், அதை சாதாரணமாக கடந்து போகும் ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள் என விமர்சித்தார்.
Discussion about this post