பரியேறும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் மாரிமுத்து. மீ டூ’ விவகாரம் குறித்து பேசிய அவர், கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக பேட்டியளித்துள்ளார். அதில், ஒரு பெண்ணை அறைக்கு வா என்று வைரமுத்து கூப்பிட்டதில் என்ன தப்பு இருக்கிறது என கேள்வி எழுப்பினார். வைரமுத்து கூப்பிட்டு, உனக்கு விருப்பம் இருந்தால் போ, இல்லை என்றால் அதோடு விட்டு விடு. வைரமுத்துவுக்கு ஆர்மோன்ஸ் இருக்கிறதல்லவா, ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து படுத்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்கு தோன்றிருக்கும் என நடிகர் மாரிமுத்து கூறினார்.
மேலும், ஒரு பெண்ணை தானே அறைக்கு வா என்று கூப்பிட்டார், ஒரு ஆம்பளையை கூப்பிட்டால் தான் அசிங்கம் என்றும் மாரிமுத்து தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு, திரை உலகில் பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மாரிமுத்துவை நடிகர் சங்கத்தில் இருந்தே நீக்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Discussion about this post