ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் பெண் நடிகர் நடிக்கமாட்டார் என அத்திரைப்படங்களின் நிர்வாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கான கதாபாத்திர தேர்வு பொறுப்பில் இருக்கும் பார்பரா ப்ரோக்கலி, “பாண்ட் என்பது ஒரு ஆணுக்கான கதாபாத்திரம். எனவே ஜேம்ஸ் பாண்ட் படங்கள் ஒரு ஆணை கதையின் நாயகனாக தேர்ந்தெடுத்தது. அதில் எந்த தவறுமில்லை நாம் ஒரு ஆண் கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்ற வேண்டிய அவசியமுமில்லை” என்று தெரிவித்துள்ளார். தற்போது ஜேம்ஸ் பாண்டாக நடித்துவரும் டேனியல் கிரேக்கின் அடுத்த படம் 2020ஆம் ஆண்டு வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அது 007 வரிசையில் கடைசி படமாக இருக்கும்.
Discussion about this post