தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் நவம்பர் 6 ஆம் தேதி, தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய்யின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில், சர்கார் படத்தைக் காண இப்போதே ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில், கேரளா திருச்சூரில் உள்ள தாய்க்குலம் கார்த்திக தியேட்டர் என்ற திரையரங்கு ‘சர்கார் மாரத்தானிற்கு’ ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, சர்கார் வெளியாகும் 6 ஆம் தேதி காலை 5 மணிமுதல், அடுத்த 24 மணிநேரத்திற்கு சர்கார் படத்தை திரையிட உள்ளது. இதில், காலை 5 மணி, காலை 8 மணி,காலை 11.30 மணி, மதியம் 3 மணி, மாலை 6.15 மணி, இரவு 9.15 மணி, இரவு 11.55 மணி, மறுநாள் விடியற்காலை 2.45 மணி என மொத்தம் 8 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post