நடிகர் விஜய்சேதுபதி திருநங்கை வேடத்தில் நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ ஒன்றை, விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி செக்க சிவந்த வானம், 96 படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக நடித்து வரும் படம் சீதக்காதி மற்றும் சூப்பர் டீலக்ஸ். இதில் சீதக்காதி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து, அக்டோபர் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து, வெளியாகும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் விஜய் சேதுபதி முதல் முறையாக ‘ஷில்பா’ என்ற திருநங்கை வேடத்தில் நடித்து வருகிறார்.
தியாகராஜா குமாரராஜா இயக்கும் இப்படத்தில் சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் சூப்பர் டீலக்ஸ் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா நடனம் ஆட சொல்லி கொடுக்கிறார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Discussion about this post