பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’. இந்த படம் இந்திய சினிமாவின் அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியில் புதிய உச்சம் தொட்டதால் மெகா ஹிட்டானது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் ‘2.0’ எனும் பெயரில் உருவாகி வருகிறது. லைகா நிறுவனம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான தொழில்நுட்பம் நிறைந்த படமாக இதை தயாரித்து வருகிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் என முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து படத்தின் டிரைலர் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள படத்தின் புதிய போஸ்டர்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் “ஐந்தாம் விசை வருகிறது” எனஇயக்குநர் ஷங்கர் செய்த ட்விட்டர் பதிவும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இயற்பியல் உலகில் ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, வலுத்த அணுக்கரு விசை மற்றும் தளர்ந்த அணுக்கரு விசை என நான்கு விசைகளே அகில விசைகளாக அறியப்பட்டு வருகின்றன. பிரபஞ்சத்தில் ஐந்தாவதாகவும்கூட ஒரு விசை இருப்பதாகப் பல்வேறு கோட்பாடுகள் உலவுகின்றன. இதுகுறித்த ஆராய்ச்சியிலும் பலர் ஈடுபட்டுள்ளார்கள். இப்படியான சூழலில் இந்தப் படத்திற்கு ஷங்கர் ஐந்தாம் விசை தியரியைக் கனெக்ட் செய்திருக்கும் காரணத்தால் அதுகுறித்த படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2.0 திரைப்படம் வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
Discussion about this post