துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் பத்திரிகையாளர் சமால் காசோகி துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கருத்துரிமைக்கு விடப்பட்ட சவாலாகும்.
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் சமால் காசோகி, அமெரிக்காவின் “வாஷிங்டன் போஸ்ட்” என்ற பிரபல பத்திரிகையில் பணியாற்றி வந்தார். இவர், தான் பணியாற்றிய காலம் முதல், சவுதி மன்னராட்சியையும், அந்நாட்டின் இளவரசர் முகமத் பின் சல்மானியின் சர்வதிகாரத்தையும் தொடர்ச்சியாக விமர்சித்தும், எழுதியும் வந்துள்ளார். தன்னை மத சீர்திருத்தவாதியாக காட்டிக்கொள்ளும் முகமத் பின் சல்மான் போலி முகத்திரையை கிழித்தெரிந்தார். அதுமட்டுமின்றி, அரசுக்கு எதிரான சமால் காசோகியின் கட்டுரையால், உள்நாட்டு அரபு பத்திரிகையில் எழுதுவது தடை செய்யப்பட்டது. ஏமனில் நடத்து வரும் போரில், சவுதி அரேபியாவின் பங்கையும் விமர்சித்திருந்தார். ஈரானை ஆதரிப்பதற்காக, கத்தார் நாட்டை புறக்கணிக்கும் சவுதி அரேபியாவின் திட்டத்தை கடுமையாக எதிர்த்தார் சமால் காசோகி.
முகமது பின் சல்மான் பதவியேற்ற பின், தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என்ற அச்சத்தில், சில காலம் தலைமறைவாகியிருந்தார் சமால் காசோகி. அதுமட்டுமின்றி, பெண்கள் உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தொழில்துறையை சார்ந்தவர்கள், நேர்மையான அதிகாரிகள் உள்பட பலர், தேசத்தின் பாதகாப்பு என்ற பெயரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அக்டோபர் 2 அன்று, துருக்கியில் உள்ள இஸ்தான்புல் சென்றார். பின்னர், தனது திருமணம் தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்றுள்ளார். ஆனால், சமால் காசோகி மீண்டும் திரும்பவில்லை. அவர் மாயமான நிலையில், சமால் காசோகி கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சமால் காசோகி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என துருக்கியில் கோரிக்கை எழுந்தது. இதனைதொடர்ந்து, சவுதி தூதரகத்தில் சமால் காசோகி கொல்லப்பட்டார் என்று அதிர்ச்சியான செய்தியை உறுதியாக கூறினார் துருக்கி அதிபர் எர்டொகன். இதற்காகவே, சவுதியை சேர்ந்த 15 உளவுத்துறை அதிகாரிகள் தூதரகத்திற்கு வந்ததாகவும் சமால் காசோகியின் கொலை திட்டமிட்ட அரசியல் கொலை எனவும் எர்டொகன் உறுதியாக கூறினார்.
இந்த கொலையில் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை திட்டவட்டமாக மறுத்தது சவுதி அரேபியா அரசு. இச்சூழலில், சவுதி தூதரகத்தின் அதிகாரி ஒருவர் வீட்டில் சமால் காசோகி உடல், துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்டக்கப்பட்டது. இதற்கு பின்னரே, சவுதி அரேபியா தூதரகத்தில் அவர் கொலை செய்யப்பட்டது ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பல்வேறு நாட்டு தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில், சமால் காசோகி பணியாற்றி வந்த “வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிகை நாளேடு, சமால் காசோகி காணவில்லை(jamal khasoggi miising) என்ற தலைப்பை மட்டும் வைத்ததோடு, அந்த செய்திக்கான பக்கத்தை நிரப்பாமல் வெள்ளை தாளையே வெளியிட்டது.
இதற்கு பின்னர், அமெரிக்காவில் சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இது அமெரிக்காவில் பரபரப்பான சூழலை உண்டாக்கியது. அதுவரை வாய் மூடி மௌனம் காத்த அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், சமால் காசோகி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக முதன் முறையாக வாய் திறந்தார். சமால் காசோகி படுகொலையில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொலையாளிகளின் விசாவை(visa) ரத்து செய்யப்படும் என்றும் டொனால்ட் டிரம்ப் கூறினார். அதோடு நில்லாமல், பத்திரிகையாளர் கொலை குறித்து, அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியா, நாடாளுமன்றத்தில் எழுப்புவார் என்றும் பிற நாடுகளிடன் கலந்தாலோசிப்பார் எனவும் டிரம்ப் தெரிவித்தார். மேலும், தன் நாட்டின் சி.ஐ.ஏ அதிகாரிகளை, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு விசாரணை நடத்த டிரம்ப் அனுப்புகிறார். அதாவது, ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம்.
ஏனென்றால், பத்திரிகையாளர் சமால் காசோகி, சவுதி அரசை மட்டும் விமர்சிக்கவில்லை. அமெரிக்காவின் அரச பயங்கரவாதத்தையும், டொனால்ட் டிரம்பின் நயவஞ்சகத்தையும், அவ்வப்பொழுது, தனது எழுத்தின் மூலமாக தோலுரித்து காட்டினார் சமால் காசோகி. அத நாளே, சமால் காசோகி படுகொலையில், சவுதி அரேபியாவுடன் கூட்டுச்சதியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக, பல்வேறு நாடுகளின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அதுமட்டுமில்லாமல், முகமது பின் சல்மான் மற்றும் டொனால்ட் டிரம்ப்பை கண்டித்து பல்வேறு போராட்டங்களும், கண்டனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. அமெரிக்கா ஊடகங்களும், உலகெங்கும் உள்ள ஜனநாயகக் குரல்களும் கொடுத்த அழுத்தத்தின் விளைவுகளாக, தற்போது சமால் காசோகி படுகொலையில் தொடர்புடைய 18 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 5 உயரதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24 அன்று, ரியாத்தில் நடந்த ‘தாவோஸ் இன் தி டெசர்ட்’ எனும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முகமத் பின் சல்மான், சாமல் காசோகி கொலையானது சவுதியில் உள்ள மக்களுக்கு வலியைத் தருவதாகவும் காசோகி கொலையில் தொடர்புடைய கொடிய குற்றாவளிகள் அனைவரும் சட்டத்தின் முன்னால் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறிக்கொண்டு இருக்கும், அதே நேரத்தில், சமால் காசோகி படுகொலை செய்யப்பட்ட இடத்தில், துருக்கி காவல்துறை ஆய்வு மேற்கொள்ள, சவுதி அரேபியா அரசு மறுத்துள்ளது. இது, போலி மத சீர்திருத்தவாதியான முகமது பின் சல்மானின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. புரியும் படியாக கூறவேண்டுமானால், இந்திய ஒன்றியத்தில் மகா சீர்த்திருவதியான ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் எப்படியோ, அது போல தான், இந்த முகமது பின் சல்மானும்.
இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கும் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளும், படுகொலைகளில் ஒன்று தான், இந்த சமால் காசோகியின் படுகொலையும். சவுதி அரேபியவுடன் தனி உறவு வைத்துள்ள அமெரிக்காவோ, அமெரிக்காவின் கைக்கூலியாக உள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளோ, சமால் காசோகியின் படுகொலைக்கு, சர்வதேச விசாரணை நடத்த முன் வராது என்பது பாமர மக்களுக்கும் தெரியும்.
குறிப்பாக, பத்திரிகையாளர் பாதுகாப்பு குறித்த சர்வதேச ஊடகக் கண்காணிப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கடந்த 16 ஆண்டுகளில் 47 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும் அதில் 33 பேர் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்றொழித்த போது, கை கட்டி சிரித்து கொண்டிருந்த இந்தியாவிடம், ஒன்றை பத்திரிகையாளனின் படுகொலைக்கு மறந்தும் கூட இந்தியா சர்வதேச விசாரணை கேட்காது. இந்தியா மட்டுமில்லை வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் உள்ள பல்வேறு நாடுகள், சர்வதேச விசாரணையை வலியுறுத்தது. ஏனென்றால், போலியான வளர்ச்சி வாதங்களை பேசி வரும் பல நாடுகள், அமெரிக்காவின் உண்மை விசுவாசியே.
சமால் காசோகி படுகொலை விவகாரத்தில் வெற்று ஆவேச பேச்சு பேசும் டொனால்ட் டிரம்ப், தனது மிகச்சிறந்த அடிமையான சவுதி அரேபியாவை எவ்வித நிலையிலும் கைவிட மாட்டார்.
எனவே, தன் நாட்டின் மீதான காதாலும், கண்ணியத்தின் மீது கொண்ட நம்பிக்கையாலும் செயல்பட்டு வந்த சமால் சகோகியின் படுகொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால், சவுதி அரேபியா மக்களோடு, உலக ஜனநாயகவாதிகள் இணைந்து களம் காண வேண்டும். இதுவே அவருக்கு நாம் செய்யும் மரியாதை.
Discussion about this post