`உறியடி’ படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் விஜய்குமார். அரசியல் சம்பந்தப்பட்ட த்ரில்லர் படமாக உருவான `உறியடி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. அதையும் விஜய்குமாரே இயக்கி நடிக்கிறார். நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்தை இயக்கி, நடிப்பதுடன் தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் மூலம் இணை தயாரிப்பாளராகவும் விஜய்குமார் இணைந்திருக்கிறார். விஜய்குமார் ஜோடியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார். மேலும் சுதாகர், ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 36 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முழு படத்தையும் முடித்திருக்கிறார். விஜய்சேதுபதியின் `96′ படத்தில் தனது இசையின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ள கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பிரவீண் குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். லினு என்ற புதுமுகம் படத்தொகுப்பையும், ஏழுமலை ஆதிகேசவன் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். பொழுதுபோக்கு அம்சங்களுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துடன் இந்தப்படம் உருவாகி இருக்கிறது.
Discussion about this post