இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, வாழைப்பழம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பதை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். 12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு மே மாதம் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
உலக கோப்பை தொடருக்கு ஆயத்தமாவது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, வீரர்கள் அஜிங்கா ரஹானே, ரோஹித் சர்மா ஆகியோர் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது, கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, இந்திய வீரர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்படாதது குறித்து சுட்டிக்காட்டி, உலகக் கோப்பையின்போது கட்டாயம் வாழைப்பழம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
போட்டிகளுக்காக உள்நாட்டில் பயணம் மேற்கொள்ளும்போது, விமானப் பயணத்தை தவிர்த்து ரயில் பயணத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். இங்கிலாந்து வீரர்களின் ரயில் பயணத்தை சுட்டிக்காட்டிய இந்திய வீரர்கள், இதற்காக பிரத்யேக ரயில் பெட்டியை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
Discussion about this post