ட்விட்டரில் மற்றவர்களின் பதிவுக்கு லைக்ஸ் போடும் வசதி விரைவில் நீக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டே வரிகளில் சொல்ல வந்ததை நறுக்கென்று பதிவு செய்பவர்களின் சொர்க்கம் ட்விட்டர். ட்விட்டரை உலகம் முழுவதும் 33.6 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவர் ஒரு ட்வீட் செய்தால், அதை அவரைப் பின் தொடருபவர்கள் விரும்பினால் லைக், ரீ-ட்வீட், ரிப்ளே செய்யலாம். இதய வடிவில் இருக்கும் லைக்ஸ் பட்டனை நீக்க ட்விட்டர் முடிவெடுத்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
லைக்ஸ் வசதி நீக்கம் பற்றிய செய்திகளை அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜேக் டோர்சே உறுதி செய்துள்ளார். லைக் பட்டனை அழுத்தும் வசதியால் உபயோகிப்பாளர்கள் இடையே கருத்துப்பரிமாற்றம் ஏதும் நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, இந்த வசதியை நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக புதிய வசதிகள் ஏதேனும் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post