ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு, பழ கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
அன்றைய தினத்தில் ‘சர்கார்’ படத்திற்கு போட்டியாக விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’, ஆர்.கே.சுரேஷின் ‘பில்லா பாண்டி’ படங்கள் வெளியாக இருப்பதாக அறிவித்தார்கள். தற்போது விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி தினத்தில் வெளியாகாமல் நவம்பர் 16ம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.
Discussion about this post