பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் நடிகை ஓவியாவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இதனிடையே சக போட்டியாளரான ஆரவ் ஓவியாவுக்கு இடையே ஏற்பட்ட காதல்-மோதல் எல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் அறிந்ததே. இதையடுத்து ஆரவ் தன் காதலை நிராகரித்ததால் மனமுடைந்த ஓவியா வீட்டை விட்டு வெளியேறினார்.
தற்போது ஓவியாவும், ஆரவும் சகஜமாக பழகி வருகிறார்கள். இந்த நிலையில் ஆரவ்வின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா மற்றும் ஆரவ்வின் நண்பர்கள் கலந்து கொண்டு அவருக்கு கேக் வெட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் மீண்டும் நெருக்கமாகி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இவர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Discussion about this post