ஒரு காய்கறி வகை உதாரணத்திற்கு தக்காளி, வெண்டைக்காய் எதுவானாலும் அதன் உருவம் ஒரே போல் இருக்காது. வெவ்வேறாக இருக்கும். அதன் கலர், உருவம் எல்லாம் ஒரே போல் இருந்தால் அவை ஹைபிரிட் வகை. உருவத்தில் பெரிய காய்கறிகளை தவிர்க்கணும். பெரிய உருளைகிழங்கு, தக்காளி, காலி ப்ளவர், முட்டைகோஸ்.
மிகவும் முக்கியமான ஒன்று பூச்சிகளே இந்த விக்ஷயத்தில் நமக்கு நண்பன், நமக்கு இல்லாத ஓர் அறியும் தன்மை பூச்சிகளுக்கு உள்ளது. அதற்கு அவை விக்ஷம் உண்டாக்கும் என்பது அறிந்து பூச்சிகொல்லி போட்ட உணவில் போகாது. சிறிய உயிரினத்திற்கு தீங்கு என்றால் அவை நாம் சிறிது சிறிதாக எடுக்கும் போது நமக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது.
பூச்சி அறிக்கின்ற உணவே இயற்க்கை முறையில் உண்டாகிய உணவு. எனவே கீரையில் பூச்சி அறித்த கீரையினை வாங்கலாம். பூச்சி அறித்த பாகத்தினை தவிர்த்து உபயோகிக்கலாம். பூச்சி அறித்த உணவை விட பூச்சிகொல்லி இட்ட பதப்படுத்திய உணவு மிக கெடுதல். சுவையில் இயற்க்கை உணவே சுவையாக இருக்கும். இயற்க்கையான உணவு சுலபமாக செரிமானம் ஆகும்.
ஆர்கானிக்ல் மணம் அதிகமாக எண்ணெய் காரம் கொஞ்சம் அதிகம் இருக்கும். அதற்காக லேபில் இப்போது செயற்கை நறுமணம் சேர்க்கிறார்கள். ஆர்கானிக்கான உணவு சீக்கிரம் சமைக்கப்படும். உரம் உள்ள உணவு சமைக்க அதிக நேரம் ஆகும். ஆனால் நிறைய ஆர்கானிக்காக கிடைப்பதால் எந்த காய்கறி, பழம் வாங்கினாலும் தண்ணீரில் சிறிது கல் உப்பு, மஞ்சள் போட்டு நன்கு சுத்தம் செய்து உபயோகிக்கலாம். முக்கியமாக திராட்சையில் நீங்கள் காணலாம் வெள்ளயாக படர்ந்திருக்கும்.
Discussion about this post