இன்றைய காலத்தில் குழந்தைகளை வெளியே அனுப்புவதே இல்லை. இன்றைய காலத்தில் அவர்கள் பிறந்ததே டெக்னாலஜி வள்ர்ந்து கொண்டே போவதால் டி.வி, போன் எல்லாம் அவர்களோடு ஒன்றாகி விடுகிறது. அதனால் பாதிப்புகள் அதிகரிக்கிறது. வீட்டிலேயே அதுவும் தனிக்குடும்பமாக இருக்கும் போது குழந்தைகள் போன் டி.வி என்பதை அதிகம் பார்க்கும். குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கை குறைகிறது. போராடும் எண்ணம் குறைகிறது.
எனவே இனி குழந்தைகளை வெளியே விளையாட விட வேண்டும். மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாட வேண்டும். அதனால் அவர்களின் அறிவு மேம்படும். அதுவும் கல்வி சம்மந்தமான விளையாட்டு பொருட்களை கொண்டு வெளியே விளையாடுவதால், க்ளாஸ் ரூம்ல் எடுக்கும் அறிவை ஆர்வாமாக கற்பார்கள்.
வெளியே உள்ள போது அவர்களுக்கு தடைகள் நீங்கிய போல உணர்வு இருக்கும் எனவே கிரியேட்டிவிட்டி அதிகமாகும். உடல் நலத்திற்கு நிறைய பலன் தரும். வெளியே உள்ள தூய்மையான காற்று, நன்கு ஓடி ஆடி விளையாடுவதால் நல்ல பசி, உறக்கம், வெயிலில் விட்டமின் போன்றவை கிடைக்கும்.
சமூகத்திறன் அதிகரிக்கும். இதுவே பெரிய பிரச்சனையாக உள்ளது. வெளியில் சுதந்திரமாக விளையாடும் குழந்தைகள் பயத்தில் தயக்கத்தில் இருந்து வெளிவந்து அனைவரிடமும் இயல்பாக பழகுவார்கள். கூச்சப்படும் குணம் இல்லாமல் அனைத்திலும் பங்கேற்பர். இவ்வாறு குழந்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் விளையாட அனுப்ப வேண்டும்.
அவர்கள் வெளி இடத்தில் கூச்சமாக பயந்தவர்களாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக வெளி இடத்தில் பழக வேண்டும். நீங்களும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும்.அப்பொழுதுதான் அவர்களின் மனதை புரிந்து கொள்ள இயலும். மற்றும் பாதுகாப்பாக இருப்பார்கள்.
சின்ன சின்ன அடிகள் பட்டாலும் விளையாட அனுப்பாமல் இருக்க கூடாது. அடிபட்டும் அடுத்து விளையாட அனுப்பினால் அவர்கள் வருங்காலத்தில் தோல்வியினை எவ்வாறு சமாளிப்பது என்பதை கற்றுகொள்வர்.
Discussion about this post