கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி ‘மீ டூ’ பூதத்தை கிளப்பினார். இந்த விவகாரம் பற்றி எரிந்தது. வைரமுத்து இந்த குற்றச்சாட்டை மறுத்துப் பேசியும் அதை பலர் நம்பவில்லை.
இந்நிலையில், வைரமுத்துவுக்கு எதிராக இன்னும் சிலரும் பாலியல் புகார் தீவெட்டி தூக்கினர். இந்த விவகாரம் ஒரு மாதிரியாக சென்று கொண்டிருந்தது. பிறகு, அமைச்சர் ஜெயக்குமார் விவகாரத்தினால் இந்த பிரச்னை சற்றே அடங்கியது.
இந்நிலையில் வைரமுத்து விவகாரத்துக்கு மீண்டும் ஓப்பனிங் கார்டு போட்டிருக்கிறார் இயக்குநர் மற்றும் நடிகரான மாரிமுத்து. ராஜ்கிரண், வசந்த், மணிரத்னம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு பிறகு யுத்தம் செய், கொடி உள்ளிட்ட பல படங்களில் நடித்த மாரிமுத்து இப்போது இந்த பிரச்னையை மீண்டும் கிளப்பியிருக்கிறார் இப்படி…
“வைரமுத்து ஆம்பிளை, அவர் பெண்ணைத்தான் அழைப்பார். இஷ்டமிருந்தால் போகலாம் இல்லேன்னா ’வேண்டாம்’ன்னு சொல்லி விட்டுடலாம். அவர் ஆம்பிளைதானே? அவருக்கும் ஆசை இருக்காதா! இந்த பிரச்னையை கொஞ்ச நாளைக்கு பேசுவாங்க, அப்புறம் வேறு பிரச்னை வந்துடும். இதுதான் நடக்கும்.” என்று கூறியுள்ளார்.
பெண்களை ஜஸ்ட் லைக் தட் ஆக மதித்தும், ‘அவரு ஆம்பிளை, கூப்பிடத்தான் செய்வார்’ என்று கூறியதாலும் மாரிமுத்துவை கழுவிக் கழுவி ஊற்ற துவங்கியுள்ளனர். வைரமுத்துவின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்தான் இந்த மாரிமுத்துவும்.
இவரால் பாவம் வைரமுத்துவுக்கு எதிரான பூதம் மீண்டும் கிளம்ப துவங்கிவிட்டது.
Discussion about this post