கல்யாணமானதும் நாயகிகளை ‘ஹீரோயின்’ லெவலில் இருந்து கழட்டி விட்டதெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் திறமையிருந்தால் கல்யாணத்துக்கு பின்னும் களைகட்டலாம், செமத்தியாக கல்லாவும் கட்டலாம் சினிமாவில் அதற்கு சமர்த்தான உதாரணம்தான் சமந்தா.
வரிசையாக கைகளில் படம் வைத்திருக்கும் சமந்தா இப்போது டோலிவுட் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் படம் ஒன்றில் நடிக்கிறார். இதில் 70 வயது பாட்டியாக நடிக்கிறாராம். கொரியன் படத்தை தழுவி எடுக்கப்படும் இந்தப்படம் ஒரு மேஜிக் படம் போலவோ அல்லது பேய் போன்று மர்ம படக்கதையாகவோ இருக்கும் என்கிறார்கள்.
ஹீரோ யாருமில்லாமல், கதாநாயகியை மையப்படுத்திய படமாக இது இருக்கும் என்று பேசப்படுகிறது.
இந்நிலையில் அட்லீ தயாரிப்பில், விஜய் நடிக்கும் மூணாவது படத்திலும் நுழைந்திட சமந்தா முயற்சிக்கிறார். தெறி, மெர்சலை தொடர்ந்து அட்லீ இயக்கிட விஜய் நடிக்கும் புதுப்படம் ஜனவரியில் துவங்குகிறது. அந்த இரு படங்களிலும் இருந்ததைப் போலவே இதிலும் தான் இருக்க வேண்டுமென்று தலைகீழாய் நிற்கிறது சமந்து பேபி.
சிக்குவாரா தளபதி? பார்க்கலாம்!
Discussion about this post