2.0 ரிலீஸுக்குப் பின் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் -2’ படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்தப் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க மிகவும் பிரியப்படுகிறாராம் ஷங்கர். இத்தனைக்கும் அவர் தயாரிப்பில் ‘இம்சை அரசன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வடிவேலுவால் கடும் பண நஷ்டமும், மன கஷ்டமும் அடைந்தும் ஷங்கர் வடிவேலை விரும்புவதுதான் திறமைக்கான மரியாதை!
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா என மெர்சல் செய்த இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றப் படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்தப் படம் கோவாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. இதே விழாவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ராமின் ‘பேரன்பு’வும் இருக்கிறது என்பது ஹைலைட்.
அரசியலில் பெரும் சரிவு ஏற்பட்டதால் மீண்டும் நடிக்க வந்து தன் இமேஜை தூக்கி நிறுத்தலாம் என்று ஆசைப்பட்டார் விஜயகாந்த். ஆனால் அவரால் நீண்ட நேரம் நிற்கவோ, நடக்கவோ செய்வதே கஷ்டமாகிவிட்ட நிலையில் நடிப்பு ஆசையை சுத்தமாக தூக்கி தூர வைத்துவிட்டாராம்.
* மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதுவரையில் காமெடியாகவும், மென்மையாகவும் மட்டுமே கேரக்டர் செய்து பழகியவருக்கு மிஷ்கினின் தொழிற்சாலையில் நுணுக்கமான நடிப்பை காட்டுவதென்பது பெரிய சவாலாக இருக்கிறதாம். ஆனால் தன் திறமை பொலிவு பெறுவதாக நண்பர்களிடம் சந்தோஷிக்கிறார்.
Discussion about this post