நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பல தேசமெங்கும் பல கட்சிகளும் பல விதமான அரசியல் நடவடிக்கைகளில் களமிறங்க துவங்கிவிட்டார்கள். தமிழகத்தின் பிரதான தலித் கட்சியான விடுதலை சிறுத்தைகள் மட்டும் ச்சும்மா இருக்குமா என்ன?
வரும் டிசம்பர் 10-ம் தேதியன்று திருச்சியில் சனாதான பயங்கரவாத அமைப்பை எதிர்த்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘தேசம் காப்போம்!’ எனும் மாநாடு நடக்கிறது. இதில் ராகுல்காந்தி, ஸ்டாலின், சீதாரம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி என பி.ஜே.பி.க்கு எதிரான கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.
இந்நிலையில் இந்த மாநாட்டின் முக்கியத்துவம் பற்றி பேசியிருக்கும் திருமாவளவன், “மதச்சார்பற்ற சக்திகள் சிதறக்கூடாது என்பதற்காக அவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் திருச்சியில் இந்த மாநாட்டை நடத்துகிறோம். ராகுல் காந்தியை பிரதமராக்குவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த தயக்கமும் இல்லை.” என்றிருக்கிறார்.
இந்நிலையில், திருமாவளவன் கடந்த சில காலமாகவே ராகுல் காந்தியை அநியாயத்துக்கு வலிய சென்று ஆதரித்து, டெல்லியில் லாபி செய்து கொண்டிருப்பது ஸ்டாலினை வெகுவாக கடுப்பாக்கியிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, “தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் தளவாய்ப்பட்டியில் சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளாள். இதில் தொடர்புடைய குற்றவாளி மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படாதது தமிழகத்துக்கே தலை குனிவு.” என்று திருமா கொளுத்திப் போட்டுள்ளது பெரிய அளவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Discussion about this post