கட்சியே துவக்கவில்லை ஆனால் அதற்குள் தமிழக அரசியலை கதகதக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். தன் ரசிகர்களைப் பார்த்து அவர் வெளியிட்ட அறிக்கைக்கு, தி.மு.க. ரியாக்ட் செய்யப்போக அது வேறுவேறு வகையில் வெடித்து வெளியேறிக் கொண்டிருக்கிறது.
ரஜினியின் அறிக்கையை உரசி, முரசொலி பத்திரிக்கை ‘சிலந்தி’ எனும் தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டது. அதில் ரஜினியை, ரசிகனின் வாய்ஸில் வெச்சு வெளுத்து வாங்கியிருந்தார்கள். இந்த விவகாரம் ரஜினியை வெகுவாக பாதித்தது. இதனால் தி.மு.க.வுக்கு தொடர் அழுத்தம் கொடுத்து, முரசொலியில் அந்த செய்திக்கு வருத்தம் தெரிவிக்க வைத்திருந்தனர்.
இந்நிலையில் தி.மு.க.வின் அந்த செயல் ரஜினி ரசிகர்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், “எங்களுக்குள் மூன்றாவது நபரின் தலையீடு ஏன்? எங்களைத் திட்டுவதற்கு எங்கள் தலைவருக்கு முழு உரிமை உள்ளது. எங்கள் நடுவில் பிறர் வருவதை அனுமதிக்க மாட்டோம். எங்கள் தலைவர் கட்சி தொடங்கினால் தி.மு.க.வின் வாக்கு வங்கிக்கு பெரிய அடி விழும். அதனாலேயே முந்திக் கொண்டு முந்திரிக்கொட்டையாக செயல்பட்டு அவரது நல்ல பெயரை கெடுக்கப்பார்க்கிறார்கள். ஆனால் அது வேலைக்கு ஆகாது.” என்று பொங்கியிருக்கிறார்கள்.
ஆனால் இதற்கெல்லாம் தி.மு.க. பெரிதாய் அலட்டிக் கொண்டது போல் தெரியவில்லை.
Discussion about this post