நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சொல்லும் தீர்ப்பையெல்லாம் ஒரு ஓரத்தில் உட்கார வைத்துவிட்டு, சபரி மலை கோயிலுக்கு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனும் தீர்ப்பை மட்டும் விழுந்து விழுந்து நிறைவேற்றுவதாக கேரள கம்யூனிஸ்ட் அரசு மீது தாறுமாறான விமர்சனம் எழுந்துள்ளது.
இதற்கு விளக்கம் தருகிறேன் பேர்வழி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா பேசுகையில் “சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கிறோம்! என்று அந்த மாநில அரசு முடிவு செய்யவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு அது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வே இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
வழிபாடு என்பது அடிப்படை உரிமை! என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே அதை நிறைவேற்றுவதுதானே சம்பந்தப்பட்ட மாநில அரசின் கடமை. கடமையை செய்வதற்காகவா அவர்களை தூற்ற வேண்டும்?
அரசின் நடவடிக்கையை, ஐயப்ப பக்தர்களுக்கு எதிரானது போல் சித்தரித்து பேசி, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி. போன்ற அமைப்புகள் கேரள மண்ணை கலவர பூமியாக்கி வருகின்றன. இதை வைத்து தமிழகத்திலும் கலவரத்தை தூண்டிட அவை சதி செய்து வருகின்றன. கலவரம் செஞ்சு அரசியலில் பிழைப்பதுதான் அவங்க பிளானே!” என்று சாடியிருக்கிறார்.
அதெல்லாம் சரி, முல்லைப்பெரியாறு, பாம்பாறு, இடுக்கி அணை விவகாரத்திலெல்லாம் சட்டத்தை மதித்துதான் கேரள அரசாங்கம் நடக்கிறதா? என்று கேட்டால் பதில் சொல்வது யார்?
சொல்லுங்க தோழர் சொல்லுங்க.
Discussion about this post