மாநிலங்களவையின் துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை கடந்த சில நாட்களாக தி.மு.க. மற்றும் காங்கிரஸை விட மிக வன்மையாக மத்திய அரசை வறுத்தெடுத்து வருகிறார். இது தமிழக பி.ஜே.பி.யினரை மட்டுமில்லாது டெல்லி பி.ஜே.பி. தலைவர்களையும் மிக கடுமையான கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
தம்பிதுரை கடந்த சில நாட்களாக தன் சொந்த தொகுதியான கரூரை சுற்றி வந்து கொண்டிருக்கிறார். அப்போது “மத்திய அரசு சும்மா திட்டங்களை அறிவிக்குதே தவிர நிதியை ஒதுக்குறதேயில்லை. தமிழக முதல்வராயிருந்த அம்மா அவர்கள், இந்த மாநிலத்தோட வளர்ச்சிக்காக மோடியிடம் பதினெட்டாயிரம் கோடி நிதி கேட்டார். அப்போது நானும் தான் கூடவே இருந்தேன். ஆனால் இதுவரையில் அதில் ஒரு ரூபாயை கூட மத்திய அரசு தமிழகத்துக்கு தரவில்லை. தூய்மை இந்தியான்னு சொல்லிக்கிட்டு ச்சும்மா கையில துடைப்பத்தை வெச்சுக்கிட்டு நின்னுட்டா எல்லாம் சரியாகிடுமா?” என்று வறுத்திருந்தார்.
இதற்கு நாசூக்காக பதில் சொல்லியிருக்கும் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் “தம்பிதுரைக்கு மத்திய அரசை பற்றியும், தமிழ்நாட்டை பற்றியும் எதுவும் தெரியவில்லை என்பது புலனாகிறது. அவர் இரண்டையும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.” என்றிருக்கிறார்.
பொன்னார் எந்த அர்த்தத்தில் இப்படி கூறியுள்ளார்? என்று தம்பிதுரைக்கு மட்டுமில்லை பலருக்கும் புரியவில்லை. ஆனால் அரசியல் விமர்சகர்களோ ‘தமிழ்நாடும், அதன் ஆட்சியும் எங்க கையிலதான் இருக்குது. அதை இயக்குறதே நாங்கதான், இது புரியாமல் தமிழ்நாட்டுக்கு எதுவுமே மத்திய அரசு தரலைன்னு சொல்றீங்களா?’ன்னு பொன்னார் கேட்காமல் கேட்டிருக்கிறார்.’ என்கிறார்கள்.
இது எப்டியிருக்கு!?………..
Discussion about this post