மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தால் தொடர் சமநிலையை அடையும். இதனால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா உள்ளூரில் ஒரு நாள் தொடரை இழக்க நேரிடும். ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரை அந்த அணி இழந்தாலும், ஆல்ரவுண்டர்கள் நிரம்பிய அந்த அணி ஒரு நாள் தொடரில் கடும் சவால் அளித்து வருகிறது.
கவுகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரின் அபார சதத்தால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றபெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில், இந்தியா நிர்ணயித்த 321 ரன்களுக்கு மேற்கு தீவுகள் கடும் சவால் அளித்தது. ஷாய் ஹோப்பின் அதிரடி சதத்தால், போட்டி டை-யில் முடிவடைந்தது. இதையடுத்து நடைபெற்ற இரு போட்டிகளிலும், இரு அணிகளும் மாறிமாறி வெற்றி பெற்றன. இந்திய அணி 2-க்கு1 என முன்னிலையில் உள்ள நிலையில் கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் நாளை நடைபெறவிருக்கிறது.
இதில் இந்தியா தோல்வியடைந்தால், 2015-ம் ஆண்டுக்குப் பிறகு உள்ளூரில் ஒரு நாள் தொடரை வெல்ல முடியாத நிலை ஏற்படும். மகேந்திர சிங் தோனி, தலைமையிலான இந்திய அணி 2-க்கு 3 என டி வில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்திருந்தது. அதேநேரத்தில் உள்ளூரில் இதுவரை ஒரு நாள் தொடரை இழக்காத கேப்டன் விராட் கோலி, அந்த பெருமையை தக்கவைப்பார் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Discussion about this post