கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய வீரர் தோனிக்கு கேரள ரசிகர்கள் மெகா கட் அவுட் வைத்துள்ளனர். திருவனந்தபுரத்தில் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வெளியே “அனைத்து கேரள தோனி ரசிகர்கள்” என்ற வாசகத்துடன் கூடிய 35 அடி உயர கட் அவுட் வைத்து இந்திய அணி வெற்றி பெற வாழ்த்தியுள்ளனர்.
தோனி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 331 போட்டிகளில் விளையாடி 10,173 ரன்கள் குவித்துள்ளார். இதில், ஆசிய அணிக்காக அவர் எடுத்த 174 ரன்களும் அடங்கும். இதன்மூலம் அவர் இந்திய அணிக்காக மட்டும் தற்போது 9,999 ரன்களில் உள்ளார்.
இன்றைய போட்டியில் அவர் 1 ரன் எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 10,000 ரன்களை கடக்கும் 5-ஆவது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். இந்த மைல் கல்லை தோனி எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Discussion about this post