பாலுறவை வெளிப்படையாகச் சித்தரிக்கும் 827 ஆபாச இணையதளங்களை மத்திய அரசு தடைசெய்துள்ளது. ஏற்கெனவே சில இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 827 தளங்களும் தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு ஆபாச இணையதளங்களை கட்டணம் செலுத்தி பார்ப்பவர்கள் மத்தியில் எதிர்ப்பும் எழுந்துள்ளது. ட்விட்டரில் #pornban என்ற ஹேஷ்டேக் மூலம் ஆயிரக் கணக்கானோர் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
சிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் இணையதளங்களையும், பாலுறவை வன்முறையுடன்கூடியதாக சித்தரிக்கும் இணையதளங்களை தடை செய்யும் அதேசமயம், வயதுவந்தோருக்கான இணையதளங்களை தடை செய்யக்கூடாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆபத்தான பல சிறிய ஆபாச இணையதளங்களை விட்டுவிட்டு, உலக அளவில் புகழ்பெற்ற, பெரிய அளவிலான வயது வந்தோருக்கான இணையதளங்களை மட்டும் அரசு தடைசெய்திருப்பதாக சம்மந்தப்பட்ட இணையதளங்களின் நிர்வாகிகள் புகார் கூறியுள்ளனர்.
Discussion about this post