பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளரும் நடிகையுமான சுஜா வருணி திருமணத்தை நடிகர் கமல் ஹாசன் முன்னின்று நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுஜா வருணியும் சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவ்வும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்த நிலையில், சென்னையில் இம்மாதம் நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் நடக்கவுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, அடிக்கடி தனக்கு அப்பா இல்லை என்று சொல்லி பீல் பண்ணியுள்ளார். இதை பார்த்து ஒரு முறை கமல் உங்க அப்பா மூன்று மாதத்திற்குள் வருகிறாரா என்று பாருங்கள், இல்லை என்றால் நானே உங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிடுகிறேன், உங்கள் ஆசை படி எனக்கு சாப்பாடு பரிமாறுங்கள் என கூறினார். கமலின் இந்த வார்த்தை சுஜா வருணிக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது.
இந்நிலையில் சமீபத்தில் திருமண பத்திரிகையை நடிகர் கமல் ஹாசனுக்கு வைத்து, தன்னுடைய திருமணத்தை அப்பா ஸ்தானத்தில் இருந்து செய்து வைக்க வேண்டும் என சுஜா கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு கமல் ஹாசனும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று சுஜா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post