கொடுக்கும் கதாபாத்திரத்தை நச்சென்று நடித்து கொடுப்பவர்தான் ஐஸ்வர்யா ராஜேக்ஷ். நான் எப்பொழுதுமே கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். படத்தில் நான் எவ்வளவு நேரம் வருகிறேன் என்பது முக்கியம் இல்லை. என் கதாபாத்திரம் எவ்வளவு வலுவானது என்பதே முக்கியம். பெரிய இயக்குனர்களும் சரி, புதுமுகங்களும் சரி எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை அளிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
சினிமாவுக்கு வந்த நாளில் இருந்து எனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. அதனால் மீ டூ இயக்கம் பற்றி நான் கருத்து தெரிவிக்க முடியாது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க அழைத்தாலும் கூட நான் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்றார் ஐஸ்வர்யா.
பல தமிழ் திரைப்படங்களில் சூப்பராக நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர்தான் ஐஸ்வர்யா ராஜேக்ஷ். மேன்மேலும் பல படங்களை நடிக்க முக்கிய கதாபாத்திரங்களை தேடி கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேக்ஷ். தற்போது 20 சதவீத படங்கள் மட்டுமே பெண்களை மையமப்படுத்தி எடுக்கப்படுகிறது. இது 50 சதவீதமாக உயர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post