மேல் முறையீடுக்கு செல்லப்போவதில்லை என்று தினகரன் அணி முடிவு செய்துவிட்டதை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் களமானது அமர்க்களப்பட துவங்கிவிட்டது. எப்போது இடைத்தேர்தல்? யார் வேட்பாளர்? எந்த தொகுதியில் எந்த கட்சி நிற்கப்போகிறது? என்றெல்லாம் அல்லு தெறிக்க துவங்கிவிட்டது…
இந்நிலையில் பா.ம.க. எம்.பி.யான அன்புமணி, இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பே இல்லை! என்று போட்டுத் தாக்கியிருக்கிறார்.
காரணம் என்னவாம்?…
இதற்கான காரணங்களாக அவர் சொல்லியிருப்பது “தமிழ்நாட்டில் நூறு சதவீதம் இடைத்தேர்தல் நடக்காது. ஆளும் கட்சிக்கு மக்களை சந்திக்க துணிவில்லை, திராணியுமில்லை. தோல்வி பயத்தில் இருக்கும் அவர்களால் நிச்சயம் இடைத்தேர்தலை நடத்திட முடியாது.
ஆக்சுவலாக ஏன் வரவேண்டும் இடைத்தேர்தல்? சட்டசபையில் நடக்கும் சம்பவங்களுக்குதான் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும். வெளியில் நடக்கும் சம்பவங்களுக்கு, தேர்தல் கமிஷன் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னரை சந்தித்து பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தது உட்கட்சி பிரச்னை. ஆனால் ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்ட ஓ.பி.எஸ். உட்பட பதினோறு பேர் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன்?” என்று பொளந்தெடுத்திருக்கிறார்.
– எஸ்.நிஷா
Discussion about this post