ஆயிரம் இருந்தாலும் தமிழ் சினிமாவுக்கென்று ஒரு தனி மரியாதை இருந்தது. ஆனால் வைரமுத்துவுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ‘மீ டூ’ விவகாரம் படிப்படியாக பல வி.ஐ.பி.க்களை விழுங்கியது. இன்று கோலிவுட்டில் பெண்ணே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்திருப்பது, ஒட்டுமொத்த கோலிவுட்டின் கெத்தையும் மண் தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறது.
தொடரி, மகளிர்மட்டும், வேலைக்காரன், 2.0, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்திருக்கும் மாயா கிருஷ்ணன் எனும் நடிகையின் மீது, சக நாடக நடிகையான அனன்யா ராமபிரசாத் தெரிவித்திருக்கும் பாலியல் புகார்கள் பதற வைக்கின்றன.
“பெண்ணான அவருடன் தோழியாக பழக துவங்கினேன். என்னுடைய சின்னச் சின்ன பர்ஷனல் விஷயங்களிலும் கூட தலையிட்டு முழுமையாக என் வாழ்க்கையை தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தார். என் குடும்பத்திலிருந்தும் கூட என்னை தனிமைப் படுத்தினார்.
பின் என்னை பாலியல் ரீதியில் கையாள துவங்கினார். துவக்கத்தில் கட்டிப்பிடிப்பது, நெற்றியில் முத்தமிடுவது! என்று இருந்தார். இதைப்பற்றி கேட்டபோது ‘நண்பர்களுக்குள் இது சகஜம்’ என்றார். பிறகு நெற்றியை விட்டு கன்னம், கழுத்து என்று உடலின் பல பாகங்களிலும் முத்தமிட துவங்கினார். என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவரது பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகமாகவே ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து விடுபட்டு வெளியேறினேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மாயா கிருஷ்ணன் ‘அனன்யாவை குழந்தையாக நினைத்தது தவறு’ என்று ட்விட் செய்துள்ளார்.
சினிமா உலகின் மிகப்பெரிய மனிதர்களின் பிம்பத்தை உடைக்க துவங்கிய மீ டூ இப்போது நடிகையர்களுக்குள்ளேயே கசமுசா! எனும் ரீதியில் கொண்டுவந்து நிறுத்தி, கோலிவுட்டி கொஞ்ச நஞ்ச மானத்தையும் பிய்த்து தின்கிறது.
கலி கோலிவுட்டா!
Discussion about this post