படேல் சிலையை திறந்து வைத்து ரசித்துக் கொண்டிருந்த பிரதமர் மோடியை பிரபல நடிகைகள் ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளனர். சர்தார் வல்லபாய் படேலின் 600 அடி உயர சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அதன்பின், சிலைக்கு கீழ் நின்று அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியது.
அதில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, ‘பறவையின் எச்சமா?’ என்ற கேள்வியுடன் காங்கிரஸ் முன்னாள் எம்.பியும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல், நடிகை கஸ்தூரியும், “இரு தலைவர்கள் – ஒருவர் இரும்பு மனிதர்; மற்றொருவர் முரண்பாட்டு மனிதர்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
Discussion about this post