கருணாநிதி மற்றும் ஸ்டாலினை ‘வாரிசு அரசியல்’ எனும் வார்த்தையை சொல்லிச் சொல்லியே வகுந்தெடுத்தவர் விஜயகாந்த். ஆனால் காலம் அவரையும் அதே ரூட்டில் பயணிக்க வைத்ததுதான் விதி.
தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்துக்கு உடல் நிலை மிக சுகவீனமாகதான் இருக்கிறது. இந்த நிலையில், அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டம் மூலமாக அரசியலுக்குள் வந்தார். அடுத்த சில நாட்களில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு ‘கழக பொருளாளர்’ பதவியை வழங்கியுள்ளார்கள்.
இதையெல்லாம் குறிப்பிட்டு ‘வாரிசு அரசியல் இல்லையா இதெல்லாம்?’ என்று கேட்டபோது, ‘கேப்டன் வாரிசு அரசியலை விமர்சித்ததில்லை. ஊழல் அரசியலைத்தான் விமர்சித்தார்.’ என்று மழுப்பல் பதில் சொல்லி எஸ்கேப் ஆனார்.
இந்நிலையில், இருபது தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கப் போகிறதென எல்லா கட்சிகளும் தயாராகும் நிலையில் தே.மு.தி.க.வும் லேசாக அசைந்து கொடுக்க துவங்கியுள்ளது. இருபது தொகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்யும் அளவுக்கு விஜயகாந்தின் உடல்நிலை இல்லை. இந்த நிலையில், பிரேமலதா அந்த வேலையை செய்யலாம் என்று நினைத்தார்.
ஆனால் தே.மு.தி.க.வின் முக்கிய நிர்வாகிகளோ “இந்த இருபது தொகுதிகளில் ஏதோ ஒரு தொகுதியில் நீங்க நின்றே ஆகணும் அண்ணி. உங்களைக் கேப்டனா நினைச்சு மக்கள் ஓட்டுப் போடுவாங்க. நீங்க நின்னால்தான் கட்சியில் எழுச்சி கிடைக்கும்.” என்று கோரிக்கை வைக்க துவங்கியுள்ளனர்.
ஏதோ இடைத்தேர்தலில் நம்ம கட்சியும் போட்டி போடுது, அதுக்காக பிரச்சாரம் செய்வோம், ஜெயித்தால் கோலாகல கொண்டாட்டம்! தோற்றால் வழக்கமான டயலாக்கை சொல்லிவிட்டு நகரலாம் என்று நினைத்த தலைமைக்கு இது ஒரு பெரிய தர்மசங்கடமாய் அமைந்துள்ளது! என்று தகவல்.
தெறிக்க விடுறாங்களே தே.மு.தி.க. ஆளுங்க!
Discussion about this post