சினிமாவில் சரியான ரோல் கிடைக்காமல் சின்ன சின்ன கேரக்டர்களிலும், ஒருபாடலுக்கு நடனமாடியும் சிரமப்பட்டு வந்த சுஜா வருணி, பிக்பாஸ் 1 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பல வாய்ப்புகள் வந்து குவிய ஆரம்பித்தன. இதனிடையே மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரணும், ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவ் என்கிற சிவகுமாரும், சுஜா வருணியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
சமீபத்தில் இருகுடும்பத்தாரின் ஒப்புதலுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், வருகிற நவம்பர் 19ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. திரைபிரபலங்களை பலரையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை இந்த ஜோடி வழங்கி வருகிறது. அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து முதல் அழைப்பிதழை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர்.
இதுபற்றி சுஜா கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே கமலிடம், என் தந்தையின் இடத்தில் இருந்து எனது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். எனது திருமணத்தை அவர் தான் முன்னின்று நடத்தி வைக்க உள்ளார். என்று குறிப்பிட்டார்.
Discussion about this post