மீடு வுக்கு போட்டியாக தற்போது தமிழ் திரையுலகில் ஹாட் டாபிக்காக வலம் வருவது கதைத்திருட்டு. யார் யார் கதையை திருடினார்கள்? உண்மையிலேயே கதை திருடப்பட்டதுதானா? இல்லை அடுத்தவன் வளர்ச்சி பொறுக்காமல் பொய் சொல்கிறார்களா? என குழம்பி போய் உள்ளனர் மக்கள்.
சமீபத்தில் சர்க்கார் திரைப்படம் என்னுடையது என இயக்குநர் பாக்கியராஜின் உதவி இயக்குநர் வருண்ராஜேந்திரன் சர்ச்சையை கிளப்பினார். தனது உதவி இயக்குநருக்காக பாக்கியராஜும் களத்தில் இறங்கி வாதாடினார். கடைசியில் இந்த விவகாரம் நீதிமன்றம் சென்று தீர்த்து வைக்கப்பட்டது.
இதையடுத்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 96 படத்தின் கதை என்னுடையது என மற்றொருவர் பிரச்சனையை கிளப்பியுள்ளார். இயக்குநர் பிரேம்குமார் இந்த கதை என்னுடையது. இது என்னுடைய குழந்தை என மனம் வெதும்பி பேசியுள்ளார்.
இயக்குநர் பிரேம்குமாரின் வாழ்வில் நடந்த கதைதான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற படமாக வெளிவந்தது என அப்படத்தின் டைட்டில் கார்டிலேயே கிரெடிட் கொடுத்திருப்பார்கள். அதேபோல் 96 படமும் தன்னடைய வாழ்வில் நடந்த கதை என பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
96 படத்தின் கதைவிவாதத்தில் பிரபல இயக்குநர்களான தியாகராஜா குமாரராஜா, பாலாஜிதரணிதரன், நடிகர் பக்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர் என்றும், இது தன்னடைய கதைதான் என்பதற்கு தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும் பிரேம்குமார்
குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் தன்னால் 96 படத்தின் வெற்றியைக் கூட கொண்டாட முடியவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார்.
யாரை நம்புவது, எதை நம்புவது என்றே தெரியவில்லை. கதையைத் திருடியர்வகைள அடையாளம் கண்டு கொள்வதைப் போலவே, கதையை திருடியதாக பொய் சொல்பவர்களையும் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது.
Discussion about this post