ராட்சஸன் பட ஹீரோ விஷ்ணு விஷால் உண்மையில் ஒரு மொபைல் ராட்சசன். ஆம் அண்ணனுக்கு மொபைல்கள் என்றாலே செம்ம கிரேஸ்! வாழ்க்கையில் இதுவரையில் ஐநூறு மொபைல்களாவது மாத்தியிருக்கிறாராம். இதை அவரே சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறார்.
தல நடிப்பில் பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் ஷூட் முழுவதுமாக முடிந்துவிட்டது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள்தான் போய்க் கொண்டிருக்கின்றன. பொதுவாக இயக்குநரின் வேலையில் பெரிதாய் தலையிடாத அஜித், இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலையிலும் தினமும் உட்கார்ந்து படத்தை செதுக்குகிறார். ஒவ்வொரு சீனும் தன் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டுமென்பது அவரது எண்ணம்.
இது சிறுத்தை சிவாவுக்கு ஒரு வகையில் உற்சாகம்தான் என்றாலும், தன் ரசிகர்களுக்காக தன் மீது உள்ள நம்பிக்கையை உரசிப்பார்க்கிறாரே என்கிற வருத்தம் அதிகமாக இருக்கிறதாம்.
டோலிவுட்டில் செம்ம ஹிட்டடித்த ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை அதே இயக்குநர் இந்தியில் ரீமேக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்தியில் அந்த படத்துக்கு ‘கபீர் சிங்’ என பெயர் வைத்துள்ளனர்.
இந்தியன் படத்தின் சீக்வெலனான ‘இந்தியன் 2’ படத்தின் வேலைகள் சற்றே இழுப்பதால், தேவர் மகன் – 2 படத்துக்கான திரைக்கதை மற்றும் சீன்ஸ்களை முடிவு செய்யும் வேலையில் கமல்ஹாசனின் டீம் இறங்கிவிட்டது என்கிறார்கள்.
Discussion about this post