சினிமா உலகில் பிரபுதேவாவின் சாதனைகள் அனைத்துமே ஆஸம் ரகம்தான். டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனாகவும், அவரது உதவியாளராகவும் சில ஹீரோ, ஹீரோயின்களுக்கு ஸ்பாட்டில் ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுக்கத்தான் கோலிவுட்டில் கால் வைத்தார் பிரபுதேவா. அதன் பிறகு சூரியன், வால்டர் வெற்றிவேல் என சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடினார்.
ஆனால் இயக்குநர் ஷங்கரின் ‘காதலன்’ படம் அவரை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியது. இதன் பின் வரிசையாக வெளியான அவரது படங்கள் பாடல்கள், நடனம் அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தாலும் கூட பெரிதாய் சக்ஸஸ் பண்ணவில்லை.
இதன் பின் நடன இயக்குநராக இருந்த பிரபுதேவா, திடீரென பட இயக்குநராக அவதாரமெடுத்தார். விஜய்யை வைத்து இவர் எடுத்த போக்கிரி மரண மாஸ் ஹிட். அடுத்து எடுத்த ‘வில்லு’ ஊற்றிக் கொண்டது. இதன் பிறகு பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். ஏற்கனவே நடன இயக்குநராக பாலிவுட் பப்பாளிகள் எல்லோரையும் இயக்கியிருந்ததால் வெகு எளிதாக மும்பை மண்ணில் ஐக்கியமானார்.
அக்ஷய்குமார், சல்மான் கான் ஆகியோரின் ஃபேவரைட் இயக்குநராக மாறினார் பிரபுதேவா.
இந்நிலையில் ‘தேவி’ படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ஹீரோவானார். பெரிய வெற்றிகள் இல்லாமல் அவரது செகண்ட் இன்னிங்ஸ் இங்கே போய்க் கொண்டிருக்கிறது. கையில் வரிசையாக படம் வைத்திருக்கும் தேவாவை மீண்டும் பாலிவுட் அழைத்திருக்கிறது. சினிமா இயக்குநராக அல்ல நடன இயக்குநராக.
ஆம் ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ படத்தில் ஒரு பாடலுக்கு அமீர்கான், கேத்ரீனா இருவருக்கும் நடனம் சொல்லிக் கொடுத்திருக்கிறார் பிரபு. மாஸ்டரை தாறுமாறாக புகழ்ந்து தள்ளியிருக்கிறார் கேத்ரீனா.
அநேகமாக மீண்டும் பிரபுதேவா பாலிவுட்டில் பிஸி இயக்குநராக மாறலாம்! என்கிறார்கள்.
Discussion about this post