தினகரன் இப்பவும் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் கலாய்ப்பது, ‘சின்னம்மாவின் காலில் விழுந்து பதவி வாங்கியவர்கள்’ என்று சொல்லித்தான்.
இந்த சூழலில், எடப்பாடியாரின் காலில் விழுந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரியாதை செலுத்த ஆரம்பித்துள்ள வைபவம் பற்றி உங்களுக்கு தெரியுமா?…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. நடராஜனின் மகள் திருமணம் திருப்பூரில் நடந்தது. இதற்கு காலையிலேயே காதும் காதும் வைத்தாற்போல் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் வந்துவிட்டு போய்விட்டார்.
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலையில்தான் வந்தார். அவர் வாழ்த்திவிட்டு இறங்கியதும், எம்.எல்.ஏ. நடராஜன் ஓடோடிச் சென்று முதல்வரின் காலை தொட்டு வணங்கி நன்றி தெரிவித்திருக்கிறார். அவரைப் பார்த்து, திருப்பூர் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வும் காலில் விழுந்திருக்கிறார். இரு எம்.எல்.ஏ.க்களையும் சர்வ சந்தோஷத்துடன் ஆசீர்வதித்திருக்கிறார் முதல்வர். இது ஹைலைட்டு.
முதல்வர் வந்துவிட்டு சென்ற பின் சிறிது நேரம் கழித்தே அமைச்சர் செங்கோட்டையன் மண்டபத்தினுள் நுழைந்துள்ளார்! என்பதுதான் அடுத்த ஹைலைட்டு!
Discussion about this post