இவ்வளவு நாட்களாக, ஆண்கள் மீது மீடு புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது முதன் முறையாக ஒரு பெண் மற்றொரு பெண் மீது மீடு புகார் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர்மட்டும், வேலைக்காரன், தொடரி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ள மாயா கிருஷ்ணன் மீது தான் இந்த மீடு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது சக நடிகையான அனன்யா ராம்பிரசாத் பாலியபுகார் தெரிவித்துள்ளார். தன்னை உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைபடுத்தி நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து பிரித்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
தன்னை துன்புறுத்தியது ஆணாக இருந்திருந்தால் அதைபுரிந்து கொண்டு விலகியிருப்பேன். பெண் என்பதால் தான் என்னால் அடையாளம் கண்டு கொள்ள வெகுநாட்களாகிவிட்டது என அனன்யா குறிப்பிட்டுள்ளார். தற்போது அவரது உறவை துண்டித்துவிட்டு மீண்டும் நண்பர்களுடன் இணைந்துவிட்டதாக தனது முகநூல் பக்கத்தில் அனன்யா தெரிவித்துள்ளார்.
ஒருநடிகை மீது மற்றொரு நடிகை மீடு புகார் தெரிவித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post