சர்க்கார் பட விவகாரம் மற்றும் சங்கத்தில் உள்ள பிரச்னைகள் காரணமாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக பாக்கியராஜ் அறிவித்துள்ளார். அவரது ராஜினாமாவை சங்க நிர்வாகிகள் ஏற்க மறுத்துள்ளனர்.
இதுதொடர்பாக எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாக்கியராஜ் ராஜினாமா செய்வதாக கொடுத்த கடிதத்தை அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்த போது அதனை அனைவரும் ஏற்க மறுத்து விட்டனர். அவரே தலைவராக தொடர வேண்டும் என்றும் விரும்புகின்றனர். அவர்களின் கருத்தையே செயற்குழு தீர்மானமாக எடுக்கப்பட்டு விட்டது, எனத் தெரிவித்துள்ளார்.
எப்போதும் போல பாக்யராஜே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக தொடர்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post