சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் டிரைலர் நாளை வெளியிடப்பட உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்ஷய்குமார் ஆகியோர் நடித்துள்ள 2.0 படத்தின் டீசன் சமீபத்தில் வெளியிடப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றது. இதையடுத்து படம் அடுத்த மாதம் 29ம் தேதி திரைக்க வர உள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் பிரம்மாண்டமாக நடத்தினார்கள். ஆனால் படத்தின் டீசருக்கு விழா எதுவும் எடுக்காமல் யு-டியூப்பில் வெளியிட்டார்கள்.
இந்நிலையில் நாளை படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளது. டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடக்குமா என ரஜினியின் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் டிரைலர் வெளியிடப்பட உள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.
விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், அக்ஷய்குமார். எமிஜாக்சன், ஏ.ஆர். ரஹ்மான், சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கின்றனர். இவர்களுடன், பாலிவுட், டோலிவுட், மல்லுவுட் என பல்வேறு திரைப்பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். படத்தின் டிரைலர் உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்று பல்வேறு சாதனைகளை படைக்கும் என தெரிகிறது.
Discussion about this post