நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன் உள்ளிட்ட 16 படங்களை தயாரித்த ராஜேஸ்வரி மணிவாசகம் சார்பில் காந்திமணிவாசகம் இயக்கும் படம் களவாணி மாப்பிள்ளை. இதில் தினேஷ் கதாநாயகனாக நடிக்க அவரது காதலியாக அதிதி மேனன் நடித்துள்ளார்.
இருவரும் நடித்த காதல் டூயட் காட்சிகள் படமாக்கப்பட்டதுடன், தினேஷிடம் அரிவாள் காட்டி அதிதி காதல் மிரட்டல்விட்ட காட்சியும் படமாக்கப்பட்டது. ஆனந்தராஜ், தேவயானி, ரேணுகா, முனீஷ்காந்த் நடிக்கின்றனர். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு. என்.ஆர்.ரகுநந்தன் இசை. இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
Discussion about this post