செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘என்.ஜி.கே.’. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே’. இந்த படத்துடன் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் சூர்யா. மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, பொமன் இரானி, சிராக் ஜானி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடிக்க, அவருடைய சிறப்புப் பாதுகாப்பு பிரிவின் தலைவராக சூர்யா நடிக்கிறார் என்கிறார்கள்.
இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை, ஹரி இயக்குகிறார். இது ‘சிங்கம்’ படத்தின் நான்காவது பாகம் கிடையாது. புதிய கதைக்களத்துடன் இருவரும் களம் இறங்குகின்றனர். மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Discussion about this post