பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளரும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விசில், சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் நடன இயக்குநர் ரகுராமின் மகளான காயத்ரிக்கும், அமெரிக்காவில் வசித்து வந்த மென்பொருள் பொறியாளரான தீபக் சந்திரசேகருக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். காயத்ரி ரகுராம் கர்ப்பமாக இருப்பது போல் உள்ளது. அதில் பெண் ஒருவர் குழந்தையுடன் இருப்பது போன்ற இமோஜியை பதிவிட்டுள்ளது அதை உறுதி செய்வது போல் உள்ளது. உண்மையில் காயத்ரி கர்ப்பமாக உள்ளாரா? இல்லையா என்பது அவரது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post