ரஜினி தனது அடுத்த படத்தை ஏ.ஆர். ரஹ்மானுடன் கமிட் செய்துள்ளார். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கப்படலாம் எனத்தெரிகிறது.
ரஜினி தற்போது கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே ரஜினிகாந்தின் 2.0 வரும் 29ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து பேட்ட வெளியாக உள்ளது.
2019ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாசுடனான புதிய படத்தில் ரஜினி நடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post