தெலுக்கில் வெளியான கீதகோவிந்தம் படத்தின் இன்கெம் இன்கெம் என்ற பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தப் படத்தை பரசுராம் இயக்கியுள்ளார். கோபி சுந்தர் என்பவர் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட நமது இளையராஜா இசையை போல் இருககும் இந்தப் பாடல் பல்வேறு புதிய சாதனைகளை படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 10 கோடி பேர் இணையதளம் வழியாக இந்தப் பாடலை பார்த்துள்ளனர்.
வேறு எந்த ஒரு தென்னிந்திய மொழிப்பாடலும் இந்த அளவுக்கு யுடியூப்பில் சாதனை படைத்ததில்லை. தமிழில் அதிகபட்சமாக மாரி படத்தில் இடம்பெற்ற டானு, டானு, வீடியோ பாடலை 6 கோடியே 49 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
Discussion about this post