மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்து நடிக்கும் படத்தை மீசையை முறுக்கு படத்தை தயாரித்த சுந்தர் சி- யே தயாரிக்கிறார். இப்படத்தை மான்கராத்தே, ரெமோ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய டி. பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார். ஆதிக்கு ஜோடியாக அனகா என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். இவர்களுடன், இயக்குநர் கரு. பழனியப்பன், பாண்டியராஜன், கவுசல்யா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
தலைப்பு வைக்கப்படாத இந்த படம் ஹாக்கி விளையாட்டை மையமாகக் கொண்டது. கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் 20 நாட்களுக்கு படமாக்கியுள்ளார்கள். ஹாக்கி விளையாட்டுதான் இப்படத்தின் கதைக்களம் என்றாலும், அதற்குள் காதல், நட்பு, குடும்பம், ஆக்ஷன் போன்ற அனைத்து கலவைகளும் உள்ளன. இப்படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும் என தெரிகிறது.
Discussion about this post