காலத்தை வென்று காவியமாக நிற்கும் திரைப்படங்களில் ஒன்றான தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் 50வது ஆண்டு பொன்விழா சென்னை வாணி மஹாலில் இன்று நடைபெறுகிறது.
1968ம் ஆண்டு வெளியான இந்த படம் வெளியாகி தற்போது 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய இந்த நாவலை ஏ.பி. நாகராஜன் திரைக்காவியமாக வடித்தார். நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், நாட்டியத்தாரகை பத்மினியும் இப்படத்திற்கு தங்கள் நடிப்பால் உயிர் கொடுத்தார்கள்.
இந்த வெற்றிப்படத்தின் 50ம் ஆண்டு நிறைவையொட்டி சிவாஜிகணேசனின் தீவிர ரசிகரான ஒய்.ஜி. மகேந்திரன் பொன்விழா நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். இன்று மாலை 6 மணியில்இருந்து 10 மணி வரைக்கும் சென்னை வாணி மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தில்லானா மோகனாம்பாள் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் கவுரவிக்கப்பட உள்ளார்கள்.
Discussion about this post