பெரிதாக அரசியலெல்லாம் பேசாமல், தான் உண்டு தன் பதவி உண்டு என்று இருப்பவர் அமைச்சர் கே.பி.அன்பழகன். ஆனால் அவரே இப்போது அதிரடி அரசியல் வசனங்களைப் பேச துவங்கிவிட்டதுதான் ஆச்சரியம், அதிர்ச்சி! எல்லாமே…
தினகரனைப் பற்றி பேசியிருப்பவர்…”தினகரனை நம்பி பாவம் பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் போனார்கள். அவரும், நான் அ.தி.மு.க.வை மீட்டெடுப்பேன்! என்று வாய்ச்சவடால் விட்டார். ஆனால் என்ன நடந்தது? அவரால் அ.தி.மு.க.வை நெருங்கி கூட நிற்கமுடியவில்லை. ஆனால் பாவம் இந்த பதினெட்டு பேரும் தகுதி இழந்ததுதான் மிச்சம். இவர்களின் வாழ்க்கையை கெடுத்துவிட்டார் தினகரன்.
ஆதரவின்றி, நிராதரவாக அவர்கள் நிற்கும் சூழலில்தான் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களை மீண்டும் தாய்க்கழகத்துக்கு அழைத்துள்ளார். நிச்சயம் அவர்களும் மனம் திருந்தி வருவார்கள் எனும் நம்பிக்கை உள்ளது.
தினகரன் இனி தனி மரமாக நிற்பதைத் தவிர வேறு வழியில்லை.” என்றவர் அடுத்து,
“ஸ்டாலினுக்கு முதலமைச்சர் ஆகியே தீர வேண்டும் எனும் வெறித்தனம் இருக்கிறது. ஆனால் ஆசை மட்டும் இருந்தால் போதாதே! அதற்கான தகுதி வேண்டுமில்லையா. தமிழகத்தில் நன்றாக நடந்து கொண்டிருக்கும் ஆட்சியைப் பார்த்து கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என்று பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார். அவரை மக்களுக்கே பிடிக்கவில்லை.” என்றிருக்கிறார்.
Discussion about this post