அ.தி.மு.க.வின் அமைச்சரவையில் தங்களுக்கு ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள், தேவைப்படும் நேரத்தில் வெளியே வருவார்கள்! என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் தினகரன். அதை மெய்ப்பிக்கும் விதமாக செல்லூர் ராஜூ போன்ற சிலர் ஏதாவது பேசி எடப்பாடி அரசுக்கு சிக்கல் தருவதுடன், சசிகலா சந்தோஷப்படும் வகையிலும் ஏதாவது வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்நிலையில் இப்போது எடப்பாடியார் சார்பாக தினகரன் அணியில் ஒரு ஸ்லீப்பர் செல் உருவாகியிருக்கிறார்! என்கிறார்கள். அந்த நபர் ‘தங்க தமிழ்செல்வன் தான்’ என்றும் வெளிப்படையாக விரல் நீட்டிக் காட்டுகிறார்கள்.
பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் நீக்கத்தை உறுதிப்படுத்தி தீர்ப்பு வந்த பின் தான் தங்கத்தமிழ் இப்படி எடப்பாடியார் பக்கம் சாய துவங்கினார்! என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வதா அல்லது நாசமாக போவதா? என்று இனிதான் முடிவெடுக்க வேண்டும்.’ என்று தீர்ப்பு நாள் அன்று தங்கம் பேசியது தினகரனுக்கு பிடிக்கவேயில்லை! என்கிறார்கள்.
இந்நிலையில், தங்கத்தமிழ் செல்வனிடம் ‘நீங்கள் எடப்பாடி பக்கம் சாய்ந்துவிட்டீர்களா?’ என கேட்டதற்கு “என்னைப் பற்றி வீண் வதந்தி கிளப்புறாங்க. நான் அந்தப் பக்கம் போறதா இருந்தால் ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடியே போயிருக்கணும். இப்போ போறதால என்ன மரியாத அங்கே கிடைக்கப்போகுது?” என்று பதில் சொல்லியிருக்கார். அவரிடம் ‘அப்படின்னா நீங்கள் டி.டி.வி.யின் விசுவாசிதானா எப்போதும்?’ என்று கேட்டதற்கு ‘நான் என்றும் சின்னம்மாவின் விசுவாசி’ என்று சொல்லியிருக்கிறார்.
Discussion about this post